Friday, May 3, 2013

பட்ஜெட்டும் நீயும்!...


உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி!...


உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி!...

கஸ்டப்பட்டு உழைச்சு, நாலு காசு சம்பாதிக்க வழியில்லாம,
அடுத்தவன் (உழைச்சவன்) காசை ஆட்டையைப் போடறவனும்,
அலும்புக்குனே திமிரு பண்ரவனும் தவிர, படிச்சவங்க யாரும் தயவு செஞ்சு இந்த வார்த்தையை உபயோகிக்காதீங்க!...

நான் தெரியாமத்தான் கேட்கிறேன்!... யாரை இங்கே தாழ்ந்த சாதினு சொல்றீங்க? எதை வச்சி இதை அளக்குறீங்க? ஒண்ணுமே புரியல...
சுயமா (தனியா) நின்னு சாதிக்க முடியாத ஒரு கூட்டம், நாலு காசு சம்பாதிக்க, ஒரு வேலை வெட்டி வாங்க, இங்கே சாதியை சாக்கா வெச்சுக்கிட்டு கூட்டமா திமிரெடுத்துத் திரியுது!...

ஆயிரம் பேரு ஒரே சாதியா இருக்கும் ஊருக்குள்ள, அவன் தான் உயர்ந்த சாதியா இருக்கான்... எதிரே தனியா வரும் எதிர் சாதிக்காரனை எகிற எகிற அடிக்கிறான்.... எம்மெல்லே (MLA) முதற்கொண்டு, எம்மாம்பெரிய ஆளாயிருந்தாலும், ஓட்டு வாங்க சாதி வித்தியாசம் இல்லாம எல்லாரு கால்லயும் விழறாங்க! இதிலே உயர்ந்த சாதி எங்கே வந்துச்சு, தாழ்ந்த சாதி எங்கே வந்துச்சு?

கும்பலா எவன் இருக்கானோ, அந்த ஊருல அவன்தான் உயர்ந்த சாதியா இருக்கான்!... அது எந்த சாதியா வேணும்னாலும் இருக்கலாம்!.... அதுனால, இனி உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதினு சும்மா ஒப்புக்கு சப்பாணியாப் பேசறத விட்டுட்டு, நல்லது பண்ற யாரா இருந்தாலும், நல்லவன்கிற சாதியா இருக்கட்டும்...கெட்டது பண்றவன் கெட்டவங்கிற சாதியா இருக்கட்டும்!...இதுக்குமேல வேற எந்த சாதியும் இங்கு வேண்டாம்....எல்லாரும் நல்லவனென்ற ஒரு சாதியாய் இருப்போம்!....

Thursday, April 18, 2013

கோவில்


கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்!…
குழந்தைகளிருக்கும் ஊரில்
கோயிலே வேண்டாம்!...
-மோகன், எல்லைப்பாளையம்

Monday, February 25, 2013

அங்கும் இங்கும்!...

Photo: Channel4

                      அங்கும் இங்கும்!...

  • நாற்றமெடுக்கும் நகரத்தின்
         நாற்சந்தியெங்கும் -
         மனிதநேயம் மரித்ததன்
         மொத்த வாடை!...

  • எஞ்சியிருந்த எதார்த்தமும்
         செத்துப்போனதில்,
         வந்தமர்ந்த வல்லூறின் வாயெங்கும்
         செங்குறுதிச்சிதறல்கள்!....

  • தென்கிழக்கில் திரண்டுவந்த
         கார்மேகத்தின்
         பிண்ணணியில்கூட -
         போர்மேகத்தின் வர்ணம்!….

  • சிறுநீர் கழிப்பதுமுதல்
         சிறுவர் கடத்தல்வரை,
         சில்லரை பார்க்கத்துடிக்கும்
         வல்லூறுகளின் பேரிரைச்சல்!...

  • பள்ளிச்சிறார்களையும்
         பால்வெறிக்குப் பாழாக்கி,
         கல்லறை சேர்க்கத்துடிக்கும்
         காமப்பேய்களின் வெறியாட்டம்!...

  • ஊறுகாய் விற்பவனைக்கூட
         உலுக்கியெடுத்து,
         ஊரைக்காலிசெய்யவைக்கும்
         உலகமயமாக்கலின் உக்கிரம்!…

  • உயிர்ஜனித்தோரையும், ஊனமுற்றோரையும்கூட
         உடைகளைந்து,
         உயிரைக்காலிசெய்யும்
         இனப்(படுகொலைப்)போரின் வக்கிரம்!...

  • தினசரி கிழித்தெறியப்படும்
         நாட்காட்டித்தாளின்
         கறுப்புமை கசிந்து,
         அறையெங்கும் கும்மிருட்டு!...

  • எப்போதும் ஏதேனுமொரு
         அவலக்குரல்களினூடே
         நிசப்தம் கலையும்
         பின்னிரவுக் கனவுகள்!…

  • எதிர்மறைக்கூறுகளே நம்மிருவரின் பொதுமறையாய்ப்போனாலும்,
         எதிர்பார்ப்புகளுடனேதான் விடிகிறது ஒவ்வொரு ஐந்தாண்டும்….
         “உங்கள் ஓட்டு, _________________________க்கே!”யென்னும் -
         சுவரொட்டிகளின் தயவில்!!!….




Thursday, February 21, 2013

முனைதல்!

இந்தப் பூமி அவனுடையது.
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை.
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன.
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
      - அதர்வண வேதம்
(இத்தகவல் அக்னிச்சிறகுகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டது....)
எல்லோரும் இன்புற்றிருப்பதல்லாமல்
யாமொன்றறியோம் பராபரமே!....
                   - அருட்பெரும்சோதி வள்ளலார் பகவான்