Wednesday, February 27, 2013
Monday, February 25, 2013
அங்கும் இங்கும்!...
![]() |
| Photo: Channel4 |
அங்கும் இங்கும்!...
- நாற்றமெடுக்கும் நகரத்தின்
மனிதநேயம் மரித்ததன்
மொத்த வாடை!...
- எஞ்சியிருந்த எதார்த்தமும்
வந்தமர்ந்த வல்லூறின் வாயெங்கும்
செங்குறுதிச்சிதறல்கள்!....
- தென்கிழக்கில் திரண்டுவந்த
பிண்ணணியில்கூட -
போர்மேகத்தின் வர்ணம்!….
- சிறுநீர் கழிப்பதுமுதல்
சில்லரை பார்க்கத்துடிக்கும்
வல்லூறுகளின் பேரிரைச்சல்!...
- பள்ளிச்சிறார்களையும்
கல்லறை சேர்க்கத்துடிக்கும்
காமப்பேய்களின் வெறியாட்டம்!...
- ஊறுகாய் விற்பவனைக்கூட
ஊரைக்காலிசெய்யவைக்கும்
உலகமயமாக்கலின் உக்கிரம்!…
- உயிர்ஜனித்தோரையும், ஊனமுற்றோரையும்கூட
உயிரைக்காலிசெய்யும்
இனப்(படுகொலைப்)போரின் வக்கிரம்!...
- தினசரி கிழித்தெறியப்படும்
கறுப்புமை கசிந்து,
அறையெங்கும் கும்மிருட்டு!...
- எப்போதும் ஏதேனுமொரு
நிசப்தம் கலையும்
பின்னிரவுக் கனவுகள்!…
- எதிர்மறைக்கூறுகளே நம்மிருவரின் பொதுமறையாய்ப்போனாலும்,
“உங்கள் ஓட்டு, _________________________க்கே!”யென்னும் -
சுவரொட்டிகளின் தயவில்!!!….
Thursday, February 21, 2013
Subscribe to:
Posts (Atom)

